பொது செய்தி

தமிழ்நாடு

விலைவாசிக்கு ஏற்ற ஊதிய உயர்வு: எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

Added : ஜன 13, 2020
Advertisement
 விலைவாசிக்கு ஏற்ற ஊதிய உயர்வு: எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

வால்பாறை:வால்பாறை மலைப்பகுதியில், மொத்தம், 32 ஆயிரத்து 825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்குள்ள பல்வேறு எஸ்டேட்களில் தற்போது, 30 ஆயிரத்திற்கும் குறைவான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வால்பாறையில் தயாரிக்கப்படும் டீ துாள் கேரள மாநிலம் கொச்சி, கோவை, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.தேயிலை சீசன் காலங்களில் ஒரு தொழிலாளி, 50 கிலோ முதல் 100 கிலோ வரை தேயிலை பறிக்கின்றனர். நான்கு கிலோ, பச்சை தேயிலையை கொண்டு ஒரு கிலோ டீ துாள் தயாரிக்கலாம். மார்கெட்டில், ஒரு கிலோ தரமான தேயிலை துாள் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக, 327.40 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. விலைவாசிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் வறுமையை தாக்குபிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டைவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது, மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்சக்கூலி (ரூ.350) வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிபடி, தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 500 ரூபாய் பெற்றுத்தர வேண்டும். குறைவான சம்பளம் வழங்குவதால் குழந்தைகளை படிக்க வைக்கவும் முடியாமல் தவிக்கிறோம், என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X