பொது செய்தி

தமிழ்நாடு

விபத்து காயங்களை வகைப்படுத்தி சிகிச்சை: டாக்டர்கள் தகவல்

Added : ஜன 13, 2020
Advertisement

பொள்ளாச்சி:விபத்து காப்பீட்டு பகுதிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து. ஒரு நாள் பயிற்சி முகாம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது.மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை வகித்தார். விபத்து காப்பீட்டு பகுதியின் தலைவர் டாக்டர் சுரேஷ் ஜோசப் பேசுகையில், ''தமிழக அரசின் மூலமாக விபத்து காப்பீட்டு பகுதியில், விபத்து காய சிகிச்சை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பகுதி, தீக்காயங்கள் சிகிச்சை பகுதி, மாரடைப்பு சிகிச்சை பகுதி, பக்கவாத சிகிச்சை பகுதி, விஷ முறிவு சரி செய்தல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகள் செயல்படுகிறது.காயத்தோடு வரும் நோயாளிகளை வகைப்படுத்த வேண்டும். முதலில் சிகிச்சை அளிப்பது (சிகப்பு), யாருக்கு அடுத்த சிகிச்சை அளிப்பது (மஞ்சள்), கடைசியாக சிகிச்சை அளிப்பவர்கள் (பச்சை) என முறைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். காயங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தி அவர்கள் உயிரை காப்பாற்றுவதற்காக இம்முறை பின்பற்றப்படுகிறது,'' என்றார்.டாக்டர்கள் வனஜா, தனலட்சுமி பேசுகையில்,''மாரடைப்பு இதய நோயாளிகளை உடனடியாக அந்த அடைப்பு நீக்கும் விதமாக சிகிச்சை அளித்து மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி ஆஞ்சியோ டெஸ்ட் செய்து, ஸ்டென்ட் வைப்பது வரை தமிழக அரசின் மூலம் இலவசமாக செயல்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.டாக்டர் பிரியதர்ஷனி, மயக்க மருந்து நிபுணர் அருள்மணி, மகப்பேறு பிரிவு டாக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்ட டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X