ராமேஸ்வரம் ரயில் நின்று செல்ல கிணத்துக்கடவு மக்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் ரயில் நின்று செல்ல கிணத்துக்கடவு மக்கள் கோரிக்கை

Added : ஜன 13, 2020

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், கோவை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை - ராமேஸ்வரம் இடையே (எண் 06031) சிறப்பு ரயில், வரும் பொங்கல் பண்டிகையான 14 மற்றும் 16ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. காலை 9:45 மணிக்கு கோவையில் புறப்பட்டு, 10:40 மணிக்கு பொள்ளாச்சி, 11:13 மணிக்கு உடுமலை, மதியம் 02:05 மணிக்கு மதுரை வழியே சென்று, மாலை 6:45 மணிக்கு ராமேஸ்வரத்தை அடைகிறது.எதிர்மார்க்கத்தில், ராமேஸ்வரம் - கோவை இடையே (எண், 05032) வரம் 15 மற்றும், 17ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் காலை 8:40 மணிக்கு புறப்பட்டு, 11:25க்கு மதுரை, மதியம் 2:40க்கு உடுமலை; 3:30க்கு பொள்ளாச்சி வழியே பயணித்து, மாலை 5:30க்கு கோவையை அடைகிறது.இந்த இரு சிறப்பு ரயில்கள், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் வழியாக நிற்காமல் செல்கிறது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், ராமேஸ்வரம் செல்ல வேண்டுமானால், 22 கி.மீ., துாரத்தில் உள்ள, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கும், 18 கி.மீ., துாரத்தில் உள்ள, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கும் செல்ல வேண்டும்.எனவே, கிணத்துக்கடவிலும் ஒரு நிமிடம் நிறுத்தி சென்றால், வசதியாக இருக்கும். இதற்கு, தெற்கு ரயில்வேதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X