பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மருத்துவ முகாம் 725 பேருக்கு சிகிச்சை

Added : ஜன 13, 2020
Advertisement

கிணத்துக்கடவு:நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பனப்பட்டியில் இலவச மருத்து முகாம் நடந்தது. முகாமினை பனப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார்.முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் டாக்டர் குழுவினர் பங்கேற்று 725 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், இரத்த பரிசோதனையில், சுகர், கொழுப்பு பரிசோதனை செய்யப்பட்டது. பிரசர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் முதியோர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஆறு பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு, கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், கண் பார்வை குறைபாட்டினை சரிசெய்ய மாணவ, மாணவியர்கள் மற்றும் முதியவர்களுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.முகாமில், வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X