பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சிகளில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கல்

Added : ஜன 13, 2020
Advertisement
 பேரூராட்சிகளில் குப்பை சேகரிக்க  பேட்டரி வாகனங்கள் வழங்கல்

தேவாரம்:தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளுக்கும், குப்பை சேகரிப்பிற்கு தலா 2 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சூழலை மாசு படுத்தாத வாகனங்களுக்கு மாறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.திடக்கழிவு மேலாண்மை திட்டம் அனைத்து பேரூராட்சிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மக்கும், மக்காத குப்பைகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று சேகரிக்கப்படுகிறது. சுகாதார பணியாளர்கள் தள்ளு வண்டிகளை பயன்படுத்துகின்றனர். சேகரிக்கப்படும் குப்பை டிராக்டர், டிப்பர் லாரிகளில் ஏற்றப்பட்டு வளம் மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. அங்கு மக்கும் கழிவுகளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும் 'யூனிட்'கள் செயல்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. குப்பை சேகரிப்பில் படிப்படியாக பேட்டரி வாகனங்களை புகுத்தும் நடைமுறை துவங்கியுள்ளது.
இதற்காக ஒவ்வொரு பேரூராட்சிக்கும் தலா 2 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'ஓட்டுனர் உரிமம் பெற்ற சுகாதார பணியாளர்களை வைத்து, பேட்டரி வாகனங்களை இயக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு உத்தரவிடும் போது, குப்பை சேகரிப்பிற்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X