பொது செய்தி

தமிழ்நாடு

சீட்டுக்கும், ஓட்டுக்கும் வேட்டு வைத்தது யார் அந்த கறுப்பு ஆடு?பொள்ளாச்சி தி.மு.க.,வில் உட்கட்சி புயல்

Added : ஜன 13, 2020
Advertisement

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், 13 ஒன்றிய வார்டுகளை கொண்டது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், தெற்கு ஒன்றிய வார்டுகளில் எட்டை தி.மு.க.,வும், ஐந்தை அ.தி.மு.க.,வும் கைப்பற்றின.இதனால், ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலில், தி.மு.க., தான் வெல்லும் என, அக்கட்சியினர் நம்பியிருந்தனர். ஆனால், மறைமுக தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது, தி.மு.க.,வினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தி.மு.க.,வை சேர்ந்த எட்டு ஒன்றிய கவுன்சிலர்களில், ஐந்தாவது வார்டில் வெற்றி பெற்ற மோகனா, அரை மணி நேரம் தாமதமாக ஒன்றிய அலுவலகம் வந்தார். இதனால், அவரை தேர்தலில் ஓட்டளிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.மீதமுள்ள ஏழு தி.மு.க., கவுன்சிலர்கள், ஐந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவரை தேர்வு செய்ய ஓட்டளித்தனர். தேர்தல் முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமி, ஏழு ஓட்டுகள் பெற்று, ஒன்றிய தலைவராக வெற்றி பெற்றார்.அ.தி.மு.க., தரப்பில் ஐந்து கவுன்சிலர்களே இருந்த நிலையில், எப்படி ஏழு ஓட்டுகள் கிடைத்தது என்ற கேள்விக்கு விடை, தி.மு.க., தரப்பில் இருந்து இருவர் கட்சி மாறி ஓட்டளித்திருக்க வேண்டும் என்பது தான்.ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியிருக்க வேண்டிய சூழலில், தங்கள் கட்சியின் இரு கருப்பு ஆடுகளால் வாய்ப்பு பறி போனது, தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வினர் கூறுகையில், 'கட்சி மாறி ஓட்டுப் போட்டவர்கள், அவர்களை நம்பி தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுத்த கட்சிக்கும், ஓட்டுப் போட்டு ஒன்றிய கவுன்சிலர்களாக தேர்வு செய்த வாக்காளர்களுக்கும் ஒரு சேர துரோகம் செய்துள்ளனர்.பணத்துக்காகவோ, பதவிக்காகவோ இதை அவர்கள் செய்திருக்கலாம். அந்த வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரத்தின் போது உழைத்ததற்காக வெட்கப்படுகிறோம். கட்சி தலைமை, கறுப்பு ஆடுகளை கண்டறிந்து, களை எடுக்க வேண்டும்,' என தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்தனர். துணைத்தலைவர் 'டிவிஸ்ட்!'காலையில், ஒன்றிய தலைவராக அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற்ற நிலையில், மதியம் நடந்த ஒன்றிய துணை தலைவர் தேர்தலில், 'டிவிஸ்ட்' காத்திருந்தது. அ.தி.மு.க., தரப்பில் யாரும் போட்டியிவில்லை.
தி.மு.க., தரப்பில் இருந்து யுவராஜ், சண்முக சுந்தரம் இருவரும் போட்டியிட்டனர். அதில், சண்முகசுந்தரம் ஏழு ஓட்டுகள் பெற்று துணை தலைவராக தேர்வானார்.இதன் மூலம், சின்ன மீனான துணை தலைவர் பதவியை விட்டுக் கொடுத்து, ஒன்றிய தலைவர் எனும் பெரிய மீனை அ.தி.மு.க., வென்றது, வெளிப்படையாக தெரிய வந்தது.
இரண்டல்ல மூன்று!
ஏற்கனவே இருவர் மாற்றி ஓட்டுப்போட்ட நிலையில், தி.மு.க., தரப்பில், தாமதமாக வந்து, தேர்தலில் பங்கேற்காமல் திரும்பிச் சென்ற தி.மு.க., பெண் கவுன்சிலர் மீதும், சர்ச்சை வெடித்துள்ளது. 'அ.தி.மு.க., தரப்பு வெற்றி பெற, மூன்று கவுன்சிலர்களை வளைத்துள்ளது. தேர்தலை தங்களுக்கு சாதகமாக நடத்தவே, தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு திடீரென தேர்தல் நடத்தும் அலுவலரை ஆளுங்கட்சி மாற்றியது,' என குற்றம் சாட்டுகின்றனர் தி.மு.க.,வினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X