பொது செய்தி

தமிழ்நாடு

டாப்சிலிப்பில் யானைப்பொங்கல்

Added : ஜன 13, 2020
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில் வரும், 17ம் தேதி யானைப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் கோழிகமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு, 29 யானைகள் வளர்க்கப்படுகிறது. இதிலுள்ள சில கும்கி யானைகள், காட்டு யானைகளை விரட்டவும், வளர்ப்பு யானைகள், சுற்றுலா பயணிகளுக்கு யானை சவாரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.சுற்றுலா பயணிகளுக்கு யானைகளின் முக்கியத்துவம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் டாப்சிலிப் யானைகளுக்கு வனத்துறையினர், யானைப்பொங்கல் விழா நடத்துவது வழக்கம். பொங்கல் வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும். யானைகளுக்கு கரும்பு, வாழை, பொங்கல், சத்தான உணவுகள் வழங்கப்படும்.இந்நிலையில், டாப்சிலிப்பில் இந்த ஆண்டுக்கான யானைப்பொங்கல் வரும், 17ம் தேதி கொண்டாட வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக தற்போது, சுற்றுலா பயணிகளுக்காக குடிநீர், கழிப்பிடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். யானைப்பொங்கல் விழாவில் பங்கேற்க சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X