பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்னும் பத்து நாளே அவகாசம்

Added : ஜன 13, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான இறுதி கட்ட சிறப்பு முகாம், நேற்று நடந்தது.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப, 2020ம் ஆண்டு ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி வரும், 22ம் தேதி வரை நடக்கிறது.இதனையடுத்து கடந்த, 4 மற்றும் 5ம் தேதி; 11ம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, இறுதி கட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது.பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 269 ஓட்டுச்சாவடிகளில், நடைபெற்றன. இம்முகாம்கள் காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை நடைபெற்றது.அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க, படிவம்,6, பெயர் நீக்கத்துக்கு படிவம், 7, வாக்காளர் அட்டையில் திருத்தத்துக்கு படிவம், 8ம் பூர்த்தி செய்து வழங்கினர். முகவரி மாற்றத்துக்கு படிவம், 8ஏ விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினர். சிறப்பு முகாம்களை சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல் ஆய்வு செய்தனர்.வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் செய்வதற்கு ஏற்ப நான்கு கட்டமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கணினியில் ஏற்றப்படும். இப்பணிகள் முடிவடைந்த பின்னர் பிப்., 14ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X