பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எம்.எஸ்., பள்ளியில் பொங்கல் திருவிழா

Added : ஜன 13, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஆர். கோபாலபுரம் முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பட்டி அமைத்து மாட்டுப்பொங்கல் வைக்கப்பட்டது. மாட்டுக்கு, பொங்கல் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் சிலம்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடி பார்வையாளர்களை அசத்தினர்.மாணவர்களின் கரகம் தலையில் வைத்து ஆடிய விதமும்; சிலம்பாட்டத்தில் ஆவேசமாக மாணவர்கள் மோதிக்கொண்டு போட்டியில் வெற்றி வாகை சூட ஆர்வம் காட்டிய விதமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, கோலப்போட்டியும் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X