பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்த காலம் முடிஞ்சாச்சு; ஒன்றிய கட்டடம் என்னாச்சு

Added : ஜன 13, 2020
Advertisement
 ஒப்பந்த காலம் முடிஞ்சாச்சு; ஒன்றிய கட்டடம் என்னாச்சு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் அமைக்கும் பணி, ஒப்பந்த காலம் முடிந்தும் நிறைவடையாமல் உள்ளது.பொள்ளாச்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், பழமையான வடக்கு ஒன்றிய அலுவலக கட்டத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் அமைக்கும் பணி கடந்த, 2017, டிசம்பரில் துவங்கப்பட்டது.இரண்டு தளங்களுடன் தலா, 8,216 சதுர அடியில் அமைக்கப்படும் புதிய கட்டடம், தரைத்தளத்தில், ஒன்றிய ஆணையாளர், ஒன்றிய தலைவர் அறைகள், கூட்ட அரங்கு, அலுவலக அறை, இருப்பு அறை மற்றும் கணினி அறைகளுடன் அமைகிறதுமுதல் தளத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அறை, திட்டப்பிரிவு அலுவலக அறை, பொறியியல் பிரிவு, பயிற்சி அரங்கு மற்றும் கழிப்பிடங்கள் அமைகின்றன.இந்த, 2.65 கோடி ரூபாய் திட்ட மதிப்புள்ள பணிக்கு, ஒன்றரை ஆண்டுகாலம் ஒப்பந்த காலம் அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிந்து, திறப்பு விழா நடத்தியிருக்க வேண்டும்.ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், புதிய கட்டடம் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை.வடக்கு ஒன்றியத்தின் தற்காலிக அலுவலகம், நகருக்கு வெளியே இயங்குகிறது. இதனால், வடக்கு ஒன்றிய பொதுமக்கள், தங்கள் அலுவல்களுக்காக ஒன்றிய அலுவலகத்தை அணுக, இரண்டு பஸ்கள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். இனி, அடிக்கடி பல்வேறு கூட்டங்கள், ஒன்றிய அலுவலகத்தில் நடத்தப்படும். அதற்கேற்ப, தற்போதுள்ள தற்காலிக அலுவலகத்தில், போதிய இட வசதியோ, அடிப்படை வசதிகளோ இல்லாத நிலையில், புதிய கட்டடத்தில், பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X