க்ரைம் செய்திகள்

Added : ஜன 13, 2020
Advertisement

குழந்தை பலிகோட்டூர் அடுத்த பொங்காளியூரை சேர்ந்த, அரசு பஸ் டிரைவர் சிவக்குமாரவடிவேல், 45. இவரது மனைவி சித்ராதேவி, 42. நேற்று, சித்ராதேவி, தனது, 2.5 வயது ஆண் குழந்தை ஹர்ஷவர்தனை அழைத்துக்கொண்டு, அருகிலுள்ள மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு, ஹர்ஷவர்தன் கோழிகளை துரத்தி விளையாடினார். கோழிகள் வீட்டுக்கு அருகில் இருந்த அரியாபுரம் கால்வாய் அருகே சென்றபோது, கோழியை பிடிக்கச்சென்ற ஹர்ஷவர்தன் கால்வாயில் விழுந்தார்.குழந்தையை காணவில்லை எனத்தேடிய சித்ராதேவி மற்றும் உறவினர்கள், குழந்தை கால்வாயில் இருப்பதை கண்டறிந்து அவரை மீட்டு, கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஹர்ஷவர்தன் பரிதாபமாக இறந்தார். கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'சிவக்குமாரவடிவேல் மற்றும் சித்ராதேவிக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில், குழந்தை கால்வாயில் விழுந்து பரிதாபமாக இறந்தது,' என்றனர்.கிணற்றில் விழுந்து பலிஆனைமலை அடுத்த வாழைக்கொம்புநாகூரை சேர்ந்தவர், ஸ்ரீவரமங்கை, 65. இவர் நேற்று முன்தினம், வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவருக்கு வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, கால்தவறி கிணற்றில் விழுந்து இறந்தார். ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் தற்கொலைகோட்டூர் அடுத்த சோமந்துரைசித்துாரை சேர்ந்த டிரைவர் நாச்சிமுத்து, 30. இவரது மனைவி உஷாராணி, 27. இருவரும் ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்; ஐந்து மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. உஷாராணியின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். நாச்சிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால், மனவிரக்தியில் இருந்த உஷாராணி நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். திருமணமாகி ஒன்னரை ஆண்டுகளே ஆனதால், பொள்ளாச்சி சப் - கலெக்டர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X