பொது செய்தி

தமிழ்நாடு

கமுதியில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

Added : ஜன 13, 2020
Advertisement
 கமுதியில் மரக்கன்றுகள்  நடும் பணி துவக்கம்

கமுதி:கமுதியில் பசுமை புரட்சி ஏற்படுத்தும் வகையில், கமுதி, கோட்டைமேடு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி பேரூராட்சி செயல் அலுவலர்இளவரசி தலைமையில் நடந்தது.
மத்திய அரசின் திட்டத்தில், கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்நிலை ஆதாரங்கள், ரோட்டோரங்கள், பஸ் ஸ்டாண்ட், பஜார்களில் மரக்கன்றுகள் நடும் பணி, பேரூராட்சி நிர்வாகத்தால் செயல்அலுவலர் இளவரசி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.நேற்று கோட்டைமேடு போலீஸ் குடியிருப்பு பகுதியில் கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில், கோட்டை முனீஸ்வரர், குண்டாத்தி வீரன் கோயில் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் வீடுகளில் மரக்கன்றுகளை வளர்க்க இலவசமாக வழங்கப்படுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X