பொது செய்தி

தமிழ்நாடு

கனவாகிப்போன நவீன மருத்துவமனை கவலையில் தேயிலை தொழிலாளர்கள்

Added : ஜன 13, 2020
Advertisement

வால்பாறை:வால்பாறையில் நவீனவசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு, ஓராண்டுக்கு மேலாகியும் நிறைவேறாததால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில் தேயிலை தொழிலில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக, வால்பாறையில் மனித வனவிலங்கு மோதல் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் முகாமிடுவதால் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. வனவிலங்குகள் அடிக்கடி தொழிலாளர்கள் தாக்குவதால், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத நிலையில், சிகிச்சைக்காக வரும் தொழிலாளர்களை பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.எனவே, வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட்களின் சார்பில், நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை கட்ட வேண்டும் என்று, கடந்த ஆண்டு பிப்., மாதம் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால், ஒராண்டுக்கு மேலாகியும் மருத்துவமனை கட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X