பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் விழிப்புணர்வு மாணவர்கள் ஆர்வம்

Added : ஜன 13, 2020
Advertisement
 வாக்காளர் விழிப்புணர்வு மாணவர்கள் ஆர்வம்

வால்பாறை:பள்ளிகளுக்கு இடையேயான வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவியம், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி, கல்லுாரியை சேர்ந்த, 50 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.தேர்தல் தாசில்தார் மூர்த்தி, அரசு கல்லுாரி முதல்வர் (பொ) மகாலட்சுமி, தலைமை ஆசிரியர் ராபின்சன் ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இது குறித்து, தேர்தல்பிரிவு மேற்பார்வையாளர் (தலைமை ஆசிரியர்) இளங்கோ கூறியதாவது, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, வாக்காளர் தினமான ஜனவரி, 25ம் தேதி பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X