பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டிப்பு! பான் மசாலா, குட்கா பறிமுதல்.. 2019ல் 548 கிலோவாக உயர்வு

Added : ஜன 13, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் கடந்தாண்டில்(2019) 548 கிலோவாக இருமடங்கு அதிகரித்துள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் கடைகளில் மறைத்து விற்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 2018ல் மாவட்டத்தில் 7,410 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 274 கடைகளில் 252 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்.இந்நிலையில், கடந்தாண்டு(2019) 7,481 கடைகளில் நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 548 கிலோ குட்கா பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சிவராமபாண்டியன் கூறியதாவது:புகையிலை பொருட்களை சாப்பிட்டதும் ஆற்றல் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு மீண்டும் சாப்பிட துாண்டும். நாளடைவில் இந்த பழக்கம் அதிகமாகி உடலுக்கு கேடு விளைவிக்கும். புகையிலையால் வாய் புற்று நோய் ஏற்படும். இளைஞர்களுக்கு நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு ஏற்படும்.இவற்றை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வெளி மாநிலங்களில் இருந்து எளிதாக கொண்டு வருகின்றனர். கடைகளில் புகையிலை விற்பனை செய்தால் 94440-04232 என்ற அலைபேசிக்கு கடை முகவரியோடு தகவல் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X