பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Added : ஜன 13, 2020
Advertisement

உச்சிப்புளி:உச்சிப்புளி அருகே கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 128 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 1000 ரூபாயுடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 775 ரேஷன் கடைகளில் ஜன.9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கடைகளில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.இந்நிலையில், கலெக்டர் வீரராகவ ராவ் உச்சிப்புளி அருகே எண்மனம் கொண்டான், பிரப்பன் வலசை ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X