பொது செய்தி

தமிழ்நாடு

குன்னுாரில் உறைபனி இரவில், 'ஜீரோ டிகிரி'

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement
 குன்னுாரில் உறைபனி  இரவில், 'ஜீரோ டிகிரி'

குன்னுார்:குன்னுார் பகுதிகளில் உறைபனி காரணமாக, இரவு நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் பதிவாகிறது.நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெலிங்டன் ஜிம்கானா, எடப்பள்ளி, பந்துமை, பகாசுரன் மலை அடிவாரப் பகுதிகளில், உறைபனியால் கடந்த இரண்டு நாட்களாக, இரவு நேரங்களில், ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
புல்வெளியில் வெண்மையாக பரந்து கிடக்கும் உறைபனியை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து போட்டோ எடுத்து செல்கின்றனர். பனியால், தேயிலை செடிகள் கருகுகின்றன; பழ உற்பத்தியும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.
நீலகிரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கலாசார அறக்கட்டளை (நெஸ்ட்) அறங்காவலர் சிவதாஸ் கூறுகையில், ''பொதுவாக, குன்னுாரில் ஊட்டி போல் உறைபனி தாக்கம் இருப்பதில்லை. குன்னுாரில் தென்மேற்கு பருவமழை குறைவாகவும், வடகிழக்கு பருவமழை அதிகமாகவும், இருக்கும். ஆனால் இந்த ஆண்டு, இரு பருவமழையும், அதிகளவில் இருந்தால், நிலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, பனியின் தாக்கம் அதிரித்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X