பொது செய்தி

தமிழ்நாடு

கடலுக்குள் கருவேல மரக் கட்டைகள் வலை சேதமாவதால் மீனவர்கள் கவலை

Added : ஜன 13, 2020
Advertisement

திருவாடானை:தொண்டி, திருப்பாலைக்குடி கடலுக்குள் மூழ்கி கிடக்கும் கருவேல மரங்களில் சிக்கி வலைகள் சேதமடைவதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். இவற்றை அகற்றநாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தினர்.
தொண்டி, திருப்பாலைக்குடி பகுதிகளில் கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதைசில மீனவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கருவேல மரங்களை வெட்டி கடலுக்குள் கொண்டு சென்று ஒரு இடத்தில் கல்லில் கட்டி போட்டு விடுவார்கள்.மூழ்கி கிடக்கும் அந்த மரங்கள் அழுகிய பின், உணவிற்காக கூடும் மீன்களை ஜெலட்டின் மூலம் வெடிக்க செய்து மயக்கம் அடைந்த மீன்களை பிடிப்பது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மலைகளை உடைக்க பயன்படுத்தப்படும்ஜெலட்டின் குச்சிகளை வாங்கி வரும் மீனவர்கள் இச்செயலில் பல ஆண்டுகளாகஈடுபடுகின்றனர். கடலுக்குள் கிடக்கும் காட்டு கருவேல மரங்களில் வலைகள் சிக்கிசேதமடைவதால் அந்த மரங்களை அகற்ற வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து தொண்டி நாட்டுப்படகு மீனவர்கள் கூறியதாவது:குறைந்த உழைப்பில் அதிக வருமானம் தேடும் வகையில் சில மீனவர்கள் இச் செயலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். படகில் மீன் பிடிக்கசெல்லும் போது கடலுக்குள் கிடக்கும் காட்டு கருவேல மரங்களில் வலைகள் சிக்கி சேதமடைகிறது.இதனால் பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் வீணாகிறது.
இது குறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, என்றனர்.போலீசார் கூறியதாவது:கடலுக்குள் கிடக்கும் மரங்களை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினரிடம் உள்ள கேமரா மூலம் கண்டு பிடிக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு மரங்களை அகற்றவும், வெடி வைத்து மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X