சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் தம்பதி தீக்குளிப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

திருப்பூர்:மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, கட்டடத் தொழிலாளி தானும் தீக்குளித்தார்.அரியலுாரை சேர்ந்தவர் பால்ராஜ், 40. இவரது மனைவி மஞ்சுளா, 36; இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, திருப்பூர் பல்லடம் ரோடு, பாரதி நகரில் தங்கி, கட்டட வேலைக்கு, தம்பதி சென்று வருகின்றனர்.நேற்றுமுன்தினம், தம்பதி தீயில் கருகியவாறு, அலறிக்கொண்டிருந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வீரபாண்டி போலீசார் நடத்திய விசாரணையில், 'மஞ்சுளா கால் வலி காரணமாக வேலைக்கு செல்லவில்லை. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பால்ராஜ், வேலைக்கு செல்லாதது குறித்து, மஞ்சுளாவிடம் கேட்டார். தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டது. இதில், மஞ்சுளாவை, பால்ராஜ் அடித்துள்ளார். பிரச்னை பெரிதாகவே, பால்ராஜ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு, பின் மனைவி மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார்' என்று தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X