பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்போட கவுன்சிலர்கள் வரவில்லை! 3ல் ஒத்திவைப்பு; 14ல் தலைவர்கள் தேர்வு

Added : ஜன 13, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:காரமடை ஒன்றியத்தில், மூன்று ஊராட்சிகளில் போதிய கோரம் இல்லாததால், துணை தலைவர் தேர்வு தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நேற்று முன்தினம் துணைத் தலைவர் தேர்வு தேர்தல் நடந்தது. இதில், ஓடந்துறை ஊராட்சியில் மொத்தம், ஒன்பது வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர்.துணைத்தலைவர் தேர்தல் நடந்தபோது, அலுவலகத்திற்கு மூன்று கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். ஆறு உறுப்பினர்கள் ஓட்டு போட வரவில்லை. அதனால் ஓட்டு போட போதிய கோரம் இல்லாததால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுபாஷ் துணைத் தலைவர் தேர்வு தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.சின்னகள்ளிபட்டி ஊராட்சியில், ஒன்பது வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில், நான்கு வார்டு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனால், தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன், தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைத்தார்.இதேபோல், தோலம்பாளையம் ஊராட்சியில் மொத்தம், 12 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இங்கு நடந்த துணைத் தலைவர் தேர்தலில், ஆறு வார்டு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். இங்கும், தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைத்தார்.காரமடை ஒன்றியத்தில் மீதமுள்ள பெள்ளாதி ஊராட்சியில் அமுதா, பெள்ளேபாளையம் -- சுரேந்திரன், சிக்கதாசம்பாளையம் - வினோத்குமார், சிங்காரம்பாளையம் - யுவராஜ், இலுப்பநத்தம் - ரங்கராஜ், இரும்பறை - பத்மினி, ஜடையம்பாளையம் - மாரண்ணன், காளம் பாளையம் - மகேஸ்வரி, கெம்மாரம்பாளையம் - நிர்மலா தேவி, மருதுார் - தேன்மொழி, முடுதுறை - ஜோதிமணி, நெல்லித்துறை - முருகன், தேக்கம்பட்டி - தங்கராஜ், வெள்ளியங்காடு - ரங்கராஜ் ஆகியோர் துணை தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X