பொது செய்தி

தமிழ்நாடு

விவேகானந்தரை பின்பற்ற அறிவுரை

Added : ஜன 13, 2020
Advertisement
 விவேகானந்தரை பின்பற்ற அறிவுரை

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கெம்பநாயக்கன் பாளையத்தில், விவேகானந்தர் மக்கள் சேவை இயக்கம் சார்பில், மைதானத்தில் சுவாமி விவேகானந்தர் படத்திற்கு மலர் துாவப்பட்டது.விழாவில், இயக்கத்தின் செயலாளர் கோபால்சாமி பேசுகையில், ''இந்திய அறிவு மரபை உலகறியச் செய்தவர் விவேகானந்தர். குறைவாக மதிப்பிட்ட மேற்கத்திய நாடுகளில், நம் நாட்டின் கல்வி, கலாசார பெருமைகளை எடுத்துக்கூறி, அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளார். அவருடைய சொற்பொழிவுகள், போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்,'' என்றார். கதவுகரையில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சேவா சங்கம் சார்பில், தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், அன்னுார், கைகாட்டி, ஓதிமலை ரோடு உள்பட பல இடங்களில் விவேகானந்தரின், 157வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X