பல்கலை மாணவியர் விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை மாணவியர் விழிப்புணர்வு பேரணி

Added : ஜன 13, 2020
Share
கோவை:அவினாசிலிங்கம் பல்கலை மற்றும் ஆன்மா அறக்கட்டளை இணைந்து, கவுண்டம்பாளையத்தை அடுத்த நல்லாம்பாளையத்தில் நாட்டுநலப்பணித் திட்ட முகாமை நடத்தின.முகாமை அவினாசிலிங்கம் பல்கலை விலங்கியல் துறை தலைவர் கிருஷ்ணவேணி துவக்கி வைத்தார். நல்லாம்பாளையத்திலுள்ள, குடிசைப்பகுதி, கோவில் நந்தவனத்தை மாணவியர் துாய்மைப்படுத்தினர். கிராம மக்களுக்கு நிலவேம்பு கஷாயம்
 பல்கலை மாணவியர் விழிப்புணர்வு பேரணி

கோவை:அவினாசிலிங்கம் பல்கலை மற்றும் ஆன்மா அறக்கட்டளை இணைந்து, கவுண்டம்பாளையத்தை அடுத்த நல்லாம்பாளையத்தில் நாட்டுநலப்பணித் திட்ட முகாமை நடத்தின.முகாமை அவினாசிலிங்கம் பல்கலை விலங்கியல் துறை தலைவர் கிருஷ்ணவேணி துவக்கி வைத்தார். நல்லாம்பாளையத்திலுள்ள, குடிசைப்பகுதி, கோவில் நந்தவனத்தை மாணவியர் துாய்மைப்படுத்தினர். கிராம மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினர்.உளவியல் நிபுனர் ஸ்ரீநிதி, கிராம பெண்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கினார். இயற்கை விவசாயம், பூச்சிக்கொல்லி பாதிப்பு, சிறு, குறு தொழிற்சாலை அமைக்கும் விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மாணவியர் நடத்திய, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை, ஆன்மா அறக்கட்டளை நிர்வாகி புஷ்பராஜ் துவக்கி வைத்தார். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன் கொடுமைகளை தடுப்பது குறித்து, மத்திய அரசின் பெண் வன் கொடுமை தடுப்பு மைய இயக்குனர் கரீனா தங்கம் ஆலோசனை வழங்கியதோடு, பேரணியை வழி நடத்தினார்.அவினாசிலிங்கம் பல்கலை நாட்டுநலப்பணித்திட்ட உதவி திட்ட அலுவலர் மகேஸ்வரி, உதவி செயல் திட்ட அலுவலர் அன்னபூரணி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X