ஊராட்சியில் வரலாறு காணாத அளவு பேரம்: நினைத்ததை முடித்த உறுப்பினர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியில் வரலாறு காணாத அளவு பேரம்: நினைத்ததை 'முடித்த' உறுப்பினர்கள்

Added : ஜன 13, 2020

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், இரு ஊராட்சிகளில் குலுக்கல் மூலமும், 12ல் போட்டியில்லாமலும், ஏழு ஊராட்சிகளில் தேர்தல் மூலமும் துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.துணைத்தலைவர் தேர்தலில், வடக்கலுார் ஊராட்சியில், வார்டு உறுப்பினர்கள் சங்கீதா, ராஜாமணி ஆகியோர் தலா ஐந்து ஓட்டுக்கள் பெற்றனர். இதையடுத்து நடந்த குலுக்கலில் சங்கீதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.அல்லப்பாளையம் ஊராட்சியில், வார்டு உறுப்பினர்கள் நந்தகுமார், ராமலிங்கம் ஆகிய இருவரும், தலா ஐந்து ஓட்டுக்கள் பெற்றனர். குலுக்கலில் நந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ரவிக்குமார், காரே கவுண்டன்பாளையம் - குருந்தாசல மூர்த்தி, குப்பேபாளையம் - பிரேமா, மசக்கவுண்டன் செட்டிபாளையம் - சரண்யா, ஒட்டர்பாளையம் - முருகசாமி, பச்சாபாளையம் - லட்சுமி, வடவள்ளி - பாலசுப்ரமணியம் ஆகியோர் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.போட்டியின்றி...அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் விஜயா, ஆம்போதி - கவிதா, கஞ்சப்பள்ளி - வசந்த், கணுவக்கரை - சிவான், கரியாம்பாளையம் - பேபி, காட்டம்பட்டி - மதியழகன், குன்னத்துார் - மூர்த்தி, குப்பனுார் - கவிதா, நாரணாபுரம் - பழனிச்சாமி, பசூர் - மூர்த்தி, பிள்ளையப்பம்பாளையம் - ஜெயந்தி, பொகலுார் - சதீஷ் ஆகியோர் துணைத் தலைவராக போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தலா ரூ.5 லட்சம்!மசக்கவுண்டன் செட்டிபாளையம், வடக்கலுார், காரே கவுண்டன்பாளையம் உள்பட பல ஊராட்சிகளில், 25 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக ஒரு ஊராட்சியில், வார்டு உறுப்பினர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் அன்னுார் வட்டாரத்தில் இந்த முறை தான், மிக அதிக அளவில் துணை தலைவர் தேர்தலில், பேரம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X