சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் நடந்ததா முறைகேடு?தேர்தல் நடத்தும் அலுவலர் மீது புகார்

Added : ஜன 13, 2020
Advertisement

கோவில்பாளையம்:எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி துணை தலைவர்தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் துணைபோனதாகவும், வார்டு உறுப்பினர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் உள்ள, ஏழு ஊராட்சிகளில், துணை தலைவர்கள் தேர்தல் நடந்தது. அதில், அத்திப்பாளையம் ஊராட்சியில் ஜெயலட்சுமி, கொண்டையம்பாளையம் - சண்முக சுந்தரம், கள்ளிப்பாளையம் - கவுதமி, வெள்ளானைப்பட்டி - ராஜன், கீரணத்தம் - கோபாலன், வெள்ளமடை - கணேசன் ஆகியோர் ஊராட்சி துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவர் தேர்தலை, தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம் நடத்தினார்.இந்த ஊராட்சியில், 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். துணைத் தலைவர் பதவிக்கு, 2வது வார்டு உறுப்பினர் தாமரைகண்ணன் என்பவரும், ஊராட்சி தலைவர் பிரியா ஆதரவாளரான சத்தியபாமா என்பவரும் போட்டியிட்டனர்.ஒன்பது வார்டு உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டன. அனைவரும் ஓட்டளித்தனர். ஓட்டு எண்ணிக்கை முடிவில் தாமரைகண்ணண் மற்றும் சத்தியபாமா இருவரும் தலா 5 வாக்குகள் பெற்றனர்.'இருவரும் சமமான ஓட்டுகள் பெற்றுள்ளதால் குலுக்கல் முறையில் துணைத்தலைவர் தேர்வு நடைபெறும்' என, தேர்தல் அலுவலர் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் பதிவான ஓட்டு சீட்டுகளை ஊராட்சி தலைவரிடம் கொடுத்துவிட்டு, தனது அலைபேசிக்கு வந்த அழைப்பில் பேசியவாறு அலுவலகத்தை விட்டு வெளியே சென்றார்.
சிறிது நேரம் கழித்து திரும்ப வந்து, தாமரைகண்ணன் அணியினர் செலுத்தியதில் ஒரு ஓட்டு செல்லாது எனத் தெரிவித்தார்.மேலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஊராட்சி மன்றத்திற்குள்ளேயே இருந்தனர். இருவரது ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். உடனே, கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர், மதியம் 1:30 மணியளவில் சத்தியபாமா துணைத்தலைவராக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு, அவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.அதன் பிறகு தான் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் இருந்த ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டனர்.இதையடுத்து அக்ரஹாரசாமக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, ஆறு ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், அவரது ஆதரவாளர்களும், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் லதாவிடம் மனு அளித்தனர்.
குலுக்கல் நடத்தியிருக்கலாம்!
ஊராட்சி உறுப்பினர்கள் கூறுகையில், 'ஆறு உறுப்பினர்கள் ஒரு அணியில் உள்ளோம். அதில் ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு என்று கூறினாலும், மீதி ஐந்து ஓட்டுக்கள் உள்ளன. குலுக்கல் நடத்தியிருக்க வேண்டும். முறைகேடாக தேர்தல் முடிவு அறிவித்துள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும்' என்றனர். ஆனால், தலா ஐந்து ஓட்டுகள் இருப்பதாகவே தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்திருந்தார். இவர்கள் ஒரு அணியில் ஆறு பேர் என்கின்றனர். எதிர் அணிக்கு ஓட்டளித்த அந்த கறுப்பு ஆடு யார் என்பது குறித்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X