கோல்கட்டாவில் மோடி நிகழ்ச்சி :மம்தா புறக்கணிப்பு

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (22)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா: மே.வங்கத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை மாநிலமுதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.
கோல்கட்டா துறைமுக பொறுப்பு கழகத்தின், 150வது ஆண்டு விழாவில் பங்கேற்ற, பிரதமர் மோடி, துறை முகத்துக்கு, ஷ்யாம பிரசாத் முகர்ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். தொடர்ந்து துறைமுக விழாவை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.






தொடர்ந்து விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இங்குள்ள ஏழை மக்கள், தலித் ஆகியோரின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு திட்டம் தீட்டியும், அதை செயல்படுத்த முடியவில்லை. மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது.





இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், மாநில அரசுக்கு ஆர்வம் இல்லை.மத்திய
அரசின் திட்டங்களின் பலன்கள், சம்பந்தப்பட்ட மக்களுக்கு நேரடியாக கிடைக்கின்றன. இதில், இடைத்தரகர் யாரும் இல்லை. சிண்டிகேட் இல்லை. மக்களின் பணத்தை இடையில்
உள்ளவர்கள் சுரண்ட முடியாது. ஆனால், இப்படிப்பட்ட திட்டங்களுக்கு தான், மாநில அரசு இடையூறு ஏற்படுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


ஷ்யாம பிரசாத் முகர்ஜி, பா.ஜ.,வின் தாய் அமைப்பான, பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனராக இருந்தவர்.


மம்தா விளக்கம்



மேற்குவங்க மாநிலத்தில் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின்போது அவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். தொடர்ந்து ஹவுரா பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிமற்றும் ஒளி காட்சி துவக்க விழாவிலும்கலந்து கொண்டார். இது குறித்து பதில் அளித்த மம்தாபானர்ஜி, அரசியல் அமைப்பு கடமை காரணமாக இந்த விழாவில் கலந்து கொண்டேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
13-ஜன-202017:48:42 IST Report Abuse
தாண்டவக்கோன் //ஷ்யாம பிரசாத் முகர்ஜி என பெயர் மாற்றம்// இது இந்தியாவோட சொதந்திரத்துக்காக போராடின பேரு இல்லியே
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-202016:41:12 IST Report Abuse
Endrum Indian ஏன் கலந்து கொள்ளவில்லை???மோடியை பார்த்தாலே எனக்கு சி ஏ ஏ, என் ஆர் சி, என் பி ஆர் தான் ஞாபகம் வருகின்றது அதான் நான் கலந்து கொள்ளவில்லை இப்படிக்கு முஸ்லீம் பேகம் மும்தாஜ்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
13-ஜன-202016:04:57 IST Report Abuse
narayanan iyer தலைப்பு செய்தியில் புறக்கணிப்பு என்றும் , விளக்க உரையில் கலந்துகொண்டார் என்றும் வெளியிட்டு யாரை திருப்திபடுத்த இந்த வகையான செய்தி ?வேண்டாம் இந்த சித்துவிளையாட்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X