பொது செய்தி

தமிழ்நாடு

குயவன்குடியில் களைகட்டிய முதியோர் பொங்கல்விழா

Added : ஜன 13, 2020
Advertisement
 குயவன்குடியில் களைகட்டிய முதியோர் பொங்கல்விழா

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் ஏராளமாp முதியவர்கள் பங்கேற்ற முதியோர் பொங்கல் விழா நடைபெற்றது.
ஹெல்பேஜ் இந்தியா மற்றும் முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு சார்பில், குயவன்குடி சுப்பையா சுவாமி கோயிலில் முதியோர் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், முதியவர்கள் சமத்துவ பொங்கலிட்டனர்.முதியவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதியவர்கள் ஆர்வத்துடன் பாட்டு பாடியும் , நடனம் ஆடியும் பார்வையாளர்களை அசத்தினர்.
முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு திட்ட மேலாளர் கார்த்திக் ராஜா வரவேற்றார். ஹெல்பேஜ் இந்தியா வாழ்வாதார மற்றும் பேரிடர் மேலாண்மை தலைவர் ராஜேஸ்வர் தேவார கொண்டா முதியோர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கினார். ஹெல்பேஜ் இந்தியா மாநிலத் தலைவர் சிவக்குமார், முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு இயக்குநர் இளங்கோ ராஜரத்தினம், திட்ட ஒருங்கிணைப்பாளர் திருக்கண்ணன், குயவன்குடி ஊராட்சி தலைவர் குப்பைக்கனி, கிராம தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X