அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., மாவட்ட அமைப்பு தேர்தல் தனியார் மகாலில் நடந்தது

Added : ஜன 13, 2020
Advertisement
 பா.ஜ., மாவட்ட  அமைப்பு தேர்தல் தனியார் மகாலில் நடந்தது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., அமைப்பு தேர்தல் ராமநாதபுரம் பாரதிநகர் டி.பிளாக்கில் உள்ள தனியார் மகாலில் நடந்தது.பா.ஜ., மாநில தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜன.15ல் நடக்கிறது.
இதையடுத்து மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் மாவட்ட அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ராமநாதபுரத்தில் நடந்த அமைப்பு தேர்தலுக்கு பா.ஜ., மாநில பொது செயலர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில செயலர் பாலகணபதி, கோட்ட இணை பொறுப்பாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவராக முரளிதரன் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி கோட்ட அமைப்பாளர் கிருஷ்ணன் புதிய மாவட்ட தலைவராக முரளிதரனை அறிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.,வினர் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X