சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிகரெட்டுக்கு எதிர்ப்பு பெண்ணுக்கு கத்திக்குத்து

Added : ஜன 13, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் பவுண்டு கடை தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி சுகன்யா 27. இவர் அந்த பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் கடை அருகில் ராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் கருணாகரன் என்பவர் சிகரெட் புகைத்துள்ளார். இதனை கண்ட சுகன்யா தனக்கு சிகரெட் வாசனை பிடிக்காது சற்று தள்ளி செல்லுங்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கருணாகரன் நண்பர்கள் மூவருடன் சுகன்யாவின் கடைக்கு வந்து கடையில் இருந்தவர்களை தாக்கினர். இதனை தடுத்த சுகன்யாவின் கணவரை கத்தியால் குத்த முயன்ற போது சுகன்யா தடுத்துள்ளார். இதில் சுகன்யாவிற்கு கையில் காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பஜார் போலீசார் 4 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X