பொது செய்தி

தமிழ்நாடு

தள்ளுவண்டிகளான அரசு டவுன் பஸ்கள்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement
 தள்ளுவண்டிகளான அரசு டவுன் பஸ்கள்

திருவாடானை:திருவாடானை பஸ்ஸ்டாண்டில் தள்ளு வண்டிகளான அரசு டவுன் பஸ்களால்பயணிகள் அவதிப்படுகின்றனர்.
திருவாடானையை மையமாக கொண்டு இருபத்துக்கும் மேற்பட் கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பஸ்கள் பழுதாகிவிடுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து திருவெற்றியூரை சேர்ந்த பழனி கூறியதாவது:இப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதடைகின்றன. டயர் பஞ்சராவது, பஸ்களின் பாகங்களில் பழுது ஏற்பட்டு பாதி வழியில் நின்று விடுவது போன்ற சம்பவங்களால் சிரமமாக உள்ளது. இதனால் அவசர நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.எனவே பழுதான டவுன் பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் இயக்க போக்குவரத்துஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X