பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

Added : ஜன 13, 2020
Share
Advertisement
 கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். முதல்வர் முத்துச்செல்வன் வரவேற்றார். மதுரை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன் மாணவர்களுக்கு பட்டமளிப்பு செய்து பேசுகையில், ''புத்தகங்களை நன்கு வாசியுங்கள். தன்னம்பிக்கையுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள், பாரம்பரிய மிக்க பண்பாடு, ஒழுக்கம், மனிதநேயத்தை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் அறிவும், ஆற்றலும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்பட வேண்டும்.'' என பேசினார்.
உறவின்முறை டிரஸ்டி கணேசன், உறவின்முறை உதவி தலைவர் சுரேஷ்குமார், உதவிச் செயலர் சரவணன், பொருளாளர் கனகராஜ், கல்லுாரி தலைவர் ஞானசேரன், கல்லுாரி உதவி செயலர் தங்கக்குமார் பொருளாளர் துரைமதிவாணன், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளி செயலர் காசிமுருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி செயலர் சங்கரசேகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X