பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ பரிசோதனை முகாம் பள்ளி, கல்லுாரி செய்திகள்

Added : ஜன 13, 2020
Share
Advertisement
 மருத்துவ பரிசோதனை முகாம் பள்ளி, கல்லுாரி செய்திகள்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ஸ்ரீசவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லுாரியில், சொக்கலிங்கபுரம் தேவாங்கர் வர்த்தகர் சங்கத்தின் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது.
தேவாங்கர் வர்த்தக சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கதிர்வேல் தலைமை வகித்தனர். ஸ்ரீசவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரியின் தலைவர் வீரபாண்டியன், செயலர் பாஸ்கரராஜன், பொருளாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
இதில், சர்க்கரை நோய், இ.சி.ஜி., ரத்த அழுத்தம், சிறுநீர் பரிசோதனை மற்றும் உடல் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஸ்ரீசவுடாம்பிகா கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர்கள் சந்திரா, பாலசுப்பிரமணியன், அருள்மொழி, கார்த்திகை சிந்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அனைத்து துறை பேராசிரியர்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X