பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இளைஞர்கள் தின கருத்தரங்கம்

Added : ஜன 13, 2020
Advertisement

விருதுநகர்:இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், விருதுநகர் நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளைஞர்கள் தின கருத்தரங்கம் மற்றும் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா விருதுநகரில் நடந்தது.
நேரு யுவகேந்திரா தேசிய சேவைத் தொண்டர் ராஜா வரவேற்றார். இதில் நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்ட இளைஞர், மகளிர் மன்றத்தில் உள்ள கிராமிய கலைஞர்கள் நையாண்டி மேளம், தப்பாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், கரகாட்டம் மற்றும் கிராமிய நடன நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிக்காட்டினர்.
அனைவருக்கும் நேரு யுவ கேந்திரா சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் பட்டயங்களை, நேரு யுவ கேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முன்னாள் இயக்குனர் சடாச்சரவேல் (பணி ஓய்வு), விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ஜாகிர்உசேன், தவில் கலைஞர் டாக்டர்.ராமசாமி, விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் ஹரிபாஸ்கர் வழங்கினார்கள். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஞானசந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X