பொது செய்தி

தமிழ்நாடு

இடுக்கியில் கடும் பனிப்பொழிவு: ஏலச்செடிகளில் நோய் அபாயம்

Added : ஜன 13, 2020
Advertisement

கம்பம்:இடுக்கி மாவட்டத்தில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் ஏலச்செடிகளில் நோய் தாக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. 'கார்டமம் ரிசர்வ்' என மத்தியவர்த்தக அமைச்சகத்தால் அறிவிக்கை செய்யப்பட்ட இடுக்கி மாவட்டத்தின் மூன்று தாலுகாக்களில் ஏலக்காய் தான் பிரதானமாகசாகுபடியாகிறது. கடந்த சில வாரங்களாக லேசாக இருந்த பனிப் பொழிவு சில நாட்களாக உச்சத்தை தொட்டுள்ளது.இதனால் மாலி, சங்குண்டான், மாதவன்கானல், சாஸ்தான்நடை, வெங்கலப்பாறை, மேப்பாறை, அந்நியார்தொழு, இஞ்சிப்பிடிப்பு,ஆமையாறு, கல்தொட்டி, வண்டன்மேடு, புளியன்மலை, சுல்தானியா, உள்ளிட்ட பல பகுதிகளில் ஏலச்செடிகளில் நோய் தாக்கும் அபாயம் உள்ளது.இது தொடர்பாக ஏலக்காய் சாகுபடி தொழில்நுட்ப ஆலோசகர் அன்பழகன் கூறுகையில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவுஅதிகமாக உள்ளது.
இதனால் செடிகளில் உள்ள காய்கள் சுருங்குகின்றன. இலைப்பேன், தண்டுதுளைப்பான், சொரிப்பேன் உள்ளிட்ட பூச்சிகள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையான பூச்சி மருந்துகளை தெளித்து இதை கட்டுப்படுத்தவேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X