பொது செய்தி

தமிழ்நாடு

புதிய திட்டம்! நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க... நாராயணத்தேவன்பட்டியில் ஆய்வு

Added : ஜன 13, 2020
Advertisement

கம்பம்:மணலாறு அணையிலிருந்து நீரை இறக்கி நாராயணத்தேவன்பட்டி மலையடிவாரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்புக்கள் குறித்த மின்வாரியம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப், பெரியாறு நீர்மின்நிலையம், சுருளியாறு நீர்மின்நிலையம், மைக்ரோ மின்நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன.
உத்தமபாளையம் தாலுகா, நாராயணத்தேவன்பட்டி மலையடிவாரத்தில் சுருளியாறு மின்நிலையம் போன்று, நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க ஆய்வுகள் நடந்து வருகிறது. ைஹவேவிஸ், மணலாறு அணையிலிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு நீரை இறக்கி மின் உற்பத்தி செய்து, பின் மீண்டும் மேல் நோக்கி நீரை ஏற்றி, இரவங்கலாறு அணைக்கு கொண்டுசெல்வதும் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
ஒரே நீரில் இரு இடங்களில் மின்உற்பத்தி செய்வதாகும். மின்வாரியம் (ஜெனரேஷன்) பொது நிர்மான பிரிவு ஆய்வு செய்கிறது.உயரம் அதிகம்: மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், சுருளியாறு நீர்மின்நிலையத்திற்கு மேகமலை இரவங்கலாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுகிறது.
978 மீ.உயரத்திலிருந்து நீரை பைப் மூலம கொண்டு வரப்பட்டு 35 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சுருளியாறு மின்நிலையத்தில் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க உள்ளது. ஆசியாவிலேயே உயரத்தில் இரண்டாவது இடமாக இந்த சுருளியாறு மின்நிலையம் உள்ளது.நீர்மின் உற்பத்திக்கு உயரம் முக்கிய அம்சமாகும். மணலாறு அணையிலிருந்து,நாராயணத்தேவன்பட்டி மலையடிவாரத்திற்கு இதே உயரம் கிடைக்கும். எனவே, திட்டத்தை வடிவமைத்து வருகிறோம்,.
உயரம் அதிகமானால் குறைந்த நீரில் கூட மின்உற்பத்தி செய்யலாம். மத்திய வனம் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெற வேண்டியுள்ளது. அதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X