பொது செய்தி

தமிழ்நாடு

கதிரடிக்கும் களமான மெயின் ரோடுகள்

Added : ஜன 13, 2020
Advertisement

வருஷநாடு:கடமலைக்குண்டு- -குமணந்தொழு நெடுஞ்சாலை ரோட்டை விவசாய பயிர்கள் கதிரடிக்கும் களமாக பயன்படுத்துவதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
கடமலை- -மயிலை ஒன்றியத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் மானாவாரி நிலங்களில் மொச்சை, கம்பு, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யபட்டன.
தற்போது அறுவடை சீசன் துவங்கி உள்ளதால் சிறு தானிய கதிர்கள், பயறு செடிகள் ஆகியவற்றை செடிகளில் இருந்து பிரித்து எடுக்கவும், விளைந்த பொருட்களை வெயிலில் உலர்த்தவும், அந்தந்த பகுதியில் கதிரடிக்கும் களத்தினை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.களம் இல்லாத கிராமங்களில் நெடுஞ்சாலை ரோட்டையே களமாக மாற்றிவிட்டனர். அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் தானியங்களை பிரிக்க ரோட்டில் குவித்து வைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு கண்ணில் துாசி விழுகிறது. டூவீலரில் வருவோர் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.இதனை தவிர்க்க களங்கள் இல்லாத கிராமங்களில் அதனை அமைத்துதர மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னமனுார்:கோட்டூரில் முதல் போகம் நெல் அறுவடை நடக்கிறது. வயல்களிலிருந்து கொண்டு வரப்படும் நெல் ,திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி உலர்த்தப்படுகிறது. ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டை கதிரடிக்கும் களமாக பயன்படுத்துகின்றனர். இதன் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை நெல் மூடைகள் அடுக்கி வைக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வழியாக சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர்.அதிக வாகன போக்குவரத்துள்ள ரோட்டை கதிரடிக்கும் களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X