பொது செய்தி

தமிழ்நாடு

போடி - மதுரை அகல ரயில்பாதை பணி மந்தம் ரயில் சேவை எப்போது என எதிர்பார்ப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

தேனி: போடி- மதுரை அகல ரயில்பாதை திட்டத்தில் ஆண்டிபட்டி பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது.
போடி- மதுரை அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்காக, மதுரையில் இருந்து போடி வரை இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரயில்சேவை 2010-ல் நிறுத்தப்பட்டது.ஒன்பது ஆண்டுகளாக தேனி மாவட்டம் ரயில் சேவை இல்லாத மாவட்டமாக நீடிக்கிறது.
போடி- மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையில் பணிகள் நிறைவடைந்துள்ளன.கணவாய் மலைப்பகுதியில் ரயில் பாதை அகலப்படுத்தும் பணிகள் தொய்வடைந்து சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஆண்டிபட்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு பாலங்கள், டி.சுப்புலாபுரம் சாமியார் மடம், - மேக்கிழார்பட்டி ரோடு, - ஏத்தக்கோவில் ரோடு, எஸ்.எஸ்.புரம் - கரிசல்பட்டி ரோடுகளில் சுரங்கப்பாதை பணிகளும் முடிந்துள்ளன.
தற்போது ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோட்டில் சுரங்கப்பாதை பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை உள்ள ரயில்பாதையில் தற்போது தண்டவாளம் பொறுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
ரயில் சேவை இல்லாததால், தேனி மாவட்டத்தில் ரோடு வழிபோக்குவரத்தில் நாளுக்கு நாள் அதிகமாகும் நெருக்கடியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.ரயில்பாதை பணிகளை விரைந்து முடிக்கவும், மதுரை - போடி வழித்தடத்தில் தொடர்ச்சியான ரயில்சேவை கிடைக்கச்செய்யவும் ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X