பொது செய்தி

தமிழ்நாடு

சங்க ஆண்டு விழா

Added : ஜன 13, 2020
Advertisement

பெரியகுளம்:வயது சான்றுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ஓய்வு பெற்றஅரசு அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியகுளம் வட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கஆண்டு விழா, நல்லாசிரியர் வைகுண்டம் தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் தாமோதரன், ஆலோசகர் கொண்டல்துரை, புரவலர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.
பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் கவுரவ தலைவர் சி.சரவணன், அறிவுத்திருக்கோயில் உபதலைவர் கவுதமன், மாவட்ட கருவூல அலுவலர்ரவிச்சந்திரன், மாநில துணைத்தலைவர் பொன்னையா, பொருளாளர் முருகேசன், இணைச் செயலாளர்கள் பழனிராஜாராம், ரேஞ்சர் காசிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
80 வயது முதல் 100 வயதுடைய குடும்ப ஓய்வூதியர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெற வயது சான்று ஆவணமாக ஆதார்அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என ஆணை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,புதிய மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்திற்காகசந்தா ரூ.350லிருந்து, ரூ.150 ஆக பிடித்தம் செய்ய ஆணை வழங்கிடவும், ஓய்வூதியம்பிடித்தம் செய்யப்படும் பணத்தை 15 ஆண்டுகளிலிருந்து, 12 ஆண்டாக குறைப்பதற்குதமிழக அரசை கேட்டுக்கொள்வது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X