பொது செய்தி

தமிழ்நாடு

குண்டும் குழியுமான ரோடுகள் சுகாதாரப்பணிகளில் தொய்வு

Added : ஜன 13, 2020
Advertisement

தேனி:குண்டும் குழியுமான ரோடுகள், துார்வாரப்படாத கழிவு நீரோடைகளால் சிரமம், கொசுத்தொல்லை என பல்வேறு பிரச்னைகளால் பழனிச்செட்டிபட்டி பேரூராட்சி 4வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்.
இந்த பேரூராட்சி 4வது வார்டில் அரசன்நகர் உள்ளது. இங்கு 4 தெருக்கள், அதன் குறுக்குத் தெருக்கள், முதல் பிரதானத் தெரு உள்ளிட்டவை உள்ளன.பொதுமக்கள் கூறுவது என்ன:
சுகாதாரக்கேடு
பி.ஜெகநாதன், அரசன் நகர், முதல்தெரு: பல ஆண்டாக இங்கு வசிக்கிறேன். பேரூராட்சியில் இருந்து அடிக்கடி சுகாதாரப் பணியாளர்கள் வார்டுக்கு வந்து செல்வது இல்லை. இதனால் கொசுக்கடி அதிகரித்துள்ளது. வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்தும் வாங்குவது இல்லை. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அரசன் நகர் முகப்புப் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. குறைபாடுகளை சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த ேவண்டும்.
பஸ் இயக்க வேண்டும்
எஸ்.போஸ்,அரசன் நகர் 3வது தெரு: பேவர் பிளாக் கற்கள் தெரு முழுவதும் பதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு சில இடங்களில் அவை உள்வாங்கி பள்ளமாக உள்ளன. டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது. வார்டில் 270 மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. ஆனால் பஸ் போக்குவரத்து இல்லை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வீரபாண்டி -- பழனிச்செட்டிபட்டி மெயின்ரோட்டிற்கு வந்து அங்கிருந்து பழனிச்செட்டிபட்டி பஸ் நிறுத்தத்திற்கு 2 கி.மீ., துாரம் நடந்து வந்து பஸ்களில் தேனிக்கும், மற்ற இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இதனால் இப்பகுதிக்கு அரசு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X