பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிறுத்தத்தில் குடிநீர் இன்றி சிரமம்

Added : ஜன 13, 2020
Advertisement

தேவதானப்பட்டி:வைகை அணை பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்ட சுற்றுலாத் தலமாக வைகை அணை உள்ளது. வைகை அணையில் பூங்காவில் குழந்தைகளுக்கு யானை சறுக்கு ராட்டினம், ரயில், மியூசிக்கல் நீரூற்று உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதனால் மூணாறு தேக்கடி வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை வந்து அதன் அழகை ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் வைகைஅணை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இருக்கை, குடிநீர் வசதி இல்லை. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி வைகை அணை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இருக்கை, குடிநீர் வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X