பொது செய்தி

தமிழ்நாடு

உருண்டை வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைவு

Added : ஜன 13, 2020
Advertisement

போடி:தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் உருண்டை வெல்லத்திற்கு கேரளா பகுதியில் தனி 'மவுசு' இருந்தும், கடந்த மாதத்தை விட ரூ. 600 விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடி, முந்தல், கோடாங்கிபட்டி, பெரியகுளம், லெட்சுமிபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. கரும்பு பயிரிட்டு 10 வது மாதத்தில் அறுவடை செய்யப்படும். கரும்பிற்கு நல்ல விலை கிடைப்பதால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் தொடர்ந்து கரும்பு பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விளைந்த கரும்பினை சில விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி விடுவர். சிலர் கொப்பறை மூலம் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர்.தேனி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் உருண்டை வெல்லத்திற்கு கேரளாவில் எப்போது 'மவுசு' அதிகம். தற்போது சபரிமலை சீசன், தைப்பொங்கல் நாட்களில் கடும் கிராக்கி இருக்கும். இந்நிலையில் கடந்த மாதம் 42 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் விலை குறைந்துள்ளது.
நல்ல விலை கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் கரும்பு பயிரிட்டு, உருண்டை வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விலை குறைவு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.விவசாயி எம்.ரவிச்சந்திரன் கூறுகையில்: 42 கிலோ உருண்டை வெல்லம் சிப்பம் கடந்த மாதம் 2 ,300 வரை விலை போனது. தற்போது கேரளவில் சீசன் துவங்கியும் கடந்த மாதத்தை காட்டிலும் ரூபாய் 600 வரை விலை குறைந்து ரூ. 1,650 முதல் 1,700 ஆக விலை உள்ளது.
உரம் விலை அதிகரித்து வருவதால் உருண்டை வெல்லத்திற்கு ரூ.2 ஆயிரம் விற்றால் தான் கட்டுபடியாகும். விலை குறைவால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X