டில்லி சட்டசபை தேர்தல் : பா.ஜ.,ஆலோசனை

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (3)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: வரவிருக்கும் டில்லி சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜ., 7 மணி நேர ஆலோசனையில் ஈடுபட்டது.

டில்லி சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் 11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. கடந்த 6 ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.






இந்நிலையில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து பா.ஜ., ஆலோசனையில் ஈடுபட்டது. பா.ஜ., தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வீட்டில் ஆலோசனை நடை பெற்றது. இதில் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, டில்லி மாநில பா.ஜ., பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் , கட்சி தலைவர்கள் ஷியாம் ஜாஜூ ,மனோஜ் திவாரி, விஜய் கோயல், விஜேந்தர் குப்தா, மற்றும் அனில் ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





கூட்டத்தில் 70 தொகுதிகளில் குறைந்த பட்சம் 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் குறித்து அடுத்து வரும் நாட்களில் விவாதிக்கப்படும்

மத்திய குழுவின் அறிக்கை மற்றும் பொது கருத்து அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும் எனவும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவை கட்சியின் மத்திய தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் மத்திய தேர்தல் குழு கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fardhikan - Rajakambeeram,இந்தியா
13-ஜன-202014:22:51 IST Report Abuse
Fardhikan எதுக்கு புட்டுக்கிட்டு போறதுக்கா
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
13-ஜன-202007:43:51 IST Report Abuse
Pandiyan வாருங்கோ ...வாருங்கோ ..டெல்லில ஆம் ஆப்தியால..பெரிய ஆப்பு ரெடியா இருக்கு ...
Rate this:
Share this comment
Ravi Manickam - EDMONTON ,கனடா
13-ஜன-202009:58:39 IST Report Abuse
Ravi Manickamஆம் ஆப்தியா? அது என்ன கட்சி பாஜக ஜெயிச்சா EVM தோத்தா மரண அடி, எல்லா தேர்தலிலும் கீரல் விழுந்த ரெக்கார்டு மாதிரி கூவுவே இதுயெல்லாம் ஒரு பொழப்பு? திருட்டு ரயிலேறி வந்த குடும்பத்துக்கு இவ்வளவு ஆயிரம் கோடி எப்படி வந்ததுன்னு கேக்க வக்கில்லை வந்துட்ட ஆப்ப தூக்கிட்டு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X