பொது செய்தி

தமிழ்நாடு

கோடையின் தேவைக்கு கால்நடை தீவனம் சேகரிப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பகுதியில் விவசாய நிலங்களில் அறுவடைக்குப்பின் எஞ்சிய தட்டைகளை கால்நடை தீவனத்திற்காக இருப்பில் வைக்கின்றனர்.
ஆண்டிபட்டி பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் சோளம், கம்பு, மக்காசோளம் போன்ற சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் கதிர்பிடிக்கும் நிலையில் சோளப்பயிர்கள் இருந்தபோது பெய்த மழை கதிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் இவற்றை தீவனத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
தற்போது விளைந்த பயிர்கள் பல இடங்களிலும் அறுவடை செய்யப்பட்டு தானியங்கள் பிரித்து எடுக்கப்படுகிறது. அறுவடைக்குப்பின் கிடைக்கும் தட்டைகள் கால்நடை தீவனமாக பயன்படுவதால் விவசாயிகள் அவற்றை இருப்பில் வைக்கத்துவங்கி உள்ளனர். பால்மாடுகள் அதிகம் வளர்க்கும் விவசாயிகள் தட்டைகளை விலைக்கு வாங்கியும் இருப்பு வைக்கின்றனர். கோடைகால தீவன தேவைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். செயற்கை தீவனங்கள் விலை உயர்வை சமாளிக்க இயற்கை தீவனங்களை கிடைக்கும்போது வாங்கி இருப்பில் வைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X