பொது செய்தி

இந்தியா

முகமூடி அணிந்த பெண், ஜே.என்.யு., மாணவி : போலீஸ் தகவல்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (47)
Advertisement

புதுடில்லி : டில்லி ஜே.என்.யு., வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்களில் முகமூடி அணிந்து வந்த பெண், பல்கலை., மாணவி என டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.






ஜன.,5 ம் தேதி டில்லி ஜே.என்யு.,வில் முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார், முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களைக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியது. அதில் பெண் ஒருவர் கையில் கட்டையுடன், முகமூடி அணிந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அப்பெண் ஜே.என்.யு.,மாணவி என்பது தெரிய வந்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.





விசாரணைக்கு ஆஜராகும்படி அப்பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரிடம் உடன் சென்ற முகமூடி அணிந்த 2 இளைஞர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பெண் டில்லி பல்கலை.,யின் டவுல்ராம் கல்லூரியை சேர்ந்தவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தங்களை போலீசார் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தனது ஆண் நண்பர்களுடன் அப்பெண் முகமூடி அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான முகமூடி அணிந்து தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது.





தாக்குதலில் ஈடுபட்ட பெண் அகில் பாரதிய வித்யார்தி பரிஷித் அமைப்பை சேர்ந்தவர் என கூறும் சிறப்பு விசாரணைக் குழுவினர், அவருக்கு அரசியல் பின்புலம் உள்ளதா என்பது பற்றி தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-202016:35:57 IST Report Abuse
Endrum Indian அப்பாடி கண்டு பிடித்தார்களா உடனே ஒரு நோபல் பரிசு பார்சேல் போலீசுக்கு
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-202018:08:46 IST Report Abuse
தமிழ்வேல் கண்டுபிடிச்சாச்சி...... ஆனால், யாரையும் இன்னும் பிடிக்கல.....
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
13-ஜன-202015:48:07 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அட உங்கள் நீங்களே adichikireengal
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-ஜன-202015:47:24 IST Report Abuse
pradeesh parthasarathy அகில் பாரதிய வித்யார்தி பரிஷித் அமைப்பை சேர்ந்தவர்........அவருக்கு அரசியல் பின்புலம் உள்ளதா என்பது பற்றி தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.//////////// ஹா ஹா .... இந்த அமைப்பே பிஜேபி யின் மாணவர் அமைப்பு தான் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X