ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (13) | |
Advertisement
தெஹ்ரான் : ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் போர்ப்பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினரைக் குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வளைகுடா பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஈரானின் முக்கியத் தளபதியான காசிம் சுலைமானியை ஜன., 5ம் தேதி அமெரிக்கா குண்டு வீசிக் கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக

தெஹ்ரான் : ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் போர்ப்பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினரைக் குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வளைகுடா பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.



latest tamil news


ஈரானின் முக்கியத் தளபதியான காசிம் சுலைமானியை ஜன., 5ம் தேதி அமெரிக்கா குண்டு வீசிக் கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 80 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்கா அதற்கு மறுப்புத் தெரிவித்தது. இருநாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானம் என நினைத்து, உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் 176 பயணிகள் உயிரிழந்தனர். இதனால் மன்னிக்க முடியா பெரும் தவற்றைச் செய்து விட்டதாகக் கூறிய ஈரான் அதிபர் ஹசான் ருஹானி மன்னிப்புக் கோரினார்.


latest tamil news


இந்த நிலையில் நேற்று (ஜன.,12) இரவு ஈராக்கில் அமெரிக்கப் படையினர் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள அல் பலாத் விமான படைத் தளம் அமைந்துள்ளது. இங்கு அமெரிக்காவின் எப்16 ரக விமானங்களை பழுது நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இப்பகுதியில் 8 கத்யுஷா வகை ராக்கெட்டுக்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈராக்கைச் சேர்ந்த இரு அதிகாரிகள் மற்றும் இரு விமானிகள் என 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒப்பந்த அடிப்படையில் தாங்கள் இந்த விமானப்படைத் தளத்தை பயன்படுத்தி வந்ததாகக் கூறும் அமெரிக்கா தங்கள் நாட்டு வீரர்கள் யாரும் இதில் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் ஈராக்கில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஜன-202015:26:18 IST Report Abuse
dandy இராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறினால் ...அடுத்த நிமிடம் ஈரானிய படைகள் அங்கு வரும் ..பிறகு இருவரையும் ஆளை ..ஆள் கொல்வார்கள் ..அடுத்து மத்தியஸ்தம் வகிக்க ரஷ்யா நுழையும் ...குரங்கு அப்பம் பிரித்த கதைதான் ..சீன தூர இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் மிகவும் மலிவு விலையில்
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஜன-202015:13:05 IST Report Abuse
dandy ஒடடக மூளைக்கு சிந்திக்க தெரியாது ...தெரிந்து இருந்தால் இன்னும் உலகம் தடடை என்று நம்புவானா ?...பெருகி கொண்டு இருக்கும் ஒடடக கூட்டம் தாங்களே மக்கள் தொகையை குறைத்து கொண்டு இருக்கின்றார்கள் ..மேற்கு நாடுகள் இல்லாவிட்டால் இன்று பசியில் பல லட்ச்சம் மார்க்கம் பிறவிகள் இறந்து இருப்பார்கள்
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
13-ஜன-202015:03:09 IST Report Abuse
oce தின்னுபுட்டு சும்மா இருக்க மாட்டான்கள். செமத்தியா உதை வாங்க போகிறான்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X