பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : ஜன 13, 2020
Advertisement

குடிநீர் தொட்டியை சீரமைப்பது அவசியம்: தலைவாசல் அருகே, ஊனத்தூரில், அம்பேத்கர் சிலை, ஆஞ்சநேயர் கோவில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சேதமடைந்துள்ளன. இதனால், எந்த நேரமும் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. பல மாதமாக, இதே நிலை நீடிப்பதால், தொட்டியின் சுவர் மேலும் சேதமடைந்து, இடியும் அபாயம் ஏற்படும். அதனால், குடிநீர் கசிவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

- ரா.காந்தமலை ஜோதி, ஊனத்தூர்.

சேதமடைந்த தரைப்பாலத்தால் விபத்து: காகாபாளையம், கனககிரி ஊராட்சி, காளியம்மன்கோவில் வீதி, ஏரி வீதி ஆகிய பகுதிகளில், இரு தரைப்பாலங்கள் உள்ளன. ஆனால், அதன் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக, இரவில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

- எம்.தனசேகரன், காகாபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X