பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

Added : ஜன 13, 2020
Advertisement

வீரபாண்டி: கூடாரவல்லி திருநாளையொட்டி, அழகிரிநாதர், சவுந்தரராஜர் கோவில்களில், ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
மார்கழி முழுவதும், பெருமாளை வேண்டி நோன்பிருந்த ஆண்டாள் நாச்சியார், ரங்கநாதருடன் சேர்ந்த நாளை, 'கூடாரவல்லி' பெயரில் விழா நடத்தப்படுகிறது. அதன்படி, சேலம், உத்தமசோழபுரம், அழகிரிநாதர் கோவிலில், நேற்று காலை, அழகிரிநாதர், ஆண்டாள் நாச்சியார் உற்சவர் திருமேனிகளுக்கு, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. திருமாங்கல்யத்துக்கு சிறப்பு யாகபூஜை செய்து, அழகிரிநாதர், ஆண்டாளுக்கு புதிய வஸ்திரம் சார்த்தி, பட்டாச்சாரியார் சூடிக்கொடுத்த சுடர்கொடியால், அழகிரிநாதர் கரத்தில் வைக்கப்பட்டிருந்த திருமாங்கல்யம், ஆண்டாள் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சவுந்தரராஜருடன், ஆண்டாள் நாச்சியாருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. பக்தர்கள், நலுங்கு பாடி மகிழ்ந்தனர். அத்துடன், மணமக்களுக்கு பக்தர்கள் மொய் எழுதினர்.

சிறப்பு அலங்காரம்: சங்ககிரி, வி.என்.பாளையம், வல்லபராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவத்தையொட்டி, நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. தொடர்ந்து, ரங்கநாதர், ஆண்டாளுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X