பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்க மாணவர்கள் உழவர் சந்தையில் ஆய்வு

Added : ஜன 13, 2020
Advertisement

சேலம்: அமெரிக்க மாணவர்கள், உழவர் சந்தையில் ஆய்வு செய்து, பழம், காய்கறி வாங்கினர். அமெரிக்க வேளாண் பல்கலையில், விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவியர், 56 பேர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், ஆய்வு மேற்கொள்கின்றனர். அதில், கோவை, வேளாண் பல்கலைக்கு வந்த சிலர், நேற்று, சேலம், சூரமங்கலம் உழவர்சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள் குறித்து, கோவை, வேளாண் பல்கலை டீன் கென்னடி விளக்கினார். இதுதவிர, காய்கறி, பழங்களில் அடங்கியுள்ள சத்துகளின் விபரங்களை தெரிவித்தார். பின், மாணவர்கள் ஒவ்வொரு கடைக்கு சென்று, விவசாயிகளிடம் பேசினர். பின், நெல்லிக்காய், வெள்ளை பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றை வாங்கிச்சென்றனர். ஆய்வின்போது, சேலம் மாவட்ட, தோட்டக்கலைத்துறை இயக்குனர் புகழேந்தி, சேலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X