பொது செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவத்துக்கு சர்வதேச அங்கீகாரம்: மருத்துவர்கள் முயற்சிக்க கலெக்டர் அறிவுரை

Added : ஜன 13, 2020
Advertisement

மேட்டூர்: ''சித்த மருத்துவத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க, மருத்துவர்கள் முயற்சிக்க வேண்டும்,'' என, கலெக்டர் ராமன் பேசினார்.
மேட்டூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், மூன்றாவது, தேசிய சித்த மருத்துவ திருவிழா, நேற்று நடந்தது. அதில், மூலிகை கண்காட்சி, உணவு திருவிழா மருத்துவ முகாமை, கலெக்டர் ராமன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரத்த பரிசோதனை நிலையத்துக்கு வழங்கிய, 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரத்த அணுக்கள் கணக்கீட்டு இயந்திர செயல்பாட்டை தொடங்கி வைத்தார். பின், சித்த மருத்துவ திருவிழா கூட்டத்தில், கலெக்டர் ராமன் பேசியதாவது: சித்தர்களின் தலைவராக கருதப்படும் அகத்தியர் எழுதிய பிரபஞ்ச காண்டத்தில், சூரியனிலிருந்து உருவான நெருப்பு பந்துதான், பூமியாக மாறியதாக கூறியுள்ளார். இதுபோல், பிரபஞ்சம் குறித்து, அந்நூலில் ஏராளமான தகவல்கள் உள்ளன. பூமியில் இயற்கை பேரழிவு அவ்வப்போது ஏற்படும். அது நிகழ வாய்ப்பில்லாத பகுதியில் தவம் செய்ய அகத்தியர் விரும்பினார். அதனால்தான், தவம் செய்ய, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதிகை மலையை தேர்வு செய்தார். சித்த மருத்துவத்தை செயல்படுத்தும் முறை, கையாளும் முறையிலுள்ள சில முரண்பாட்டால், அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது. அது கிடைக்க, மருத்துவர்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேட்டூர் சப் - கலெக்டர் சரவணன், மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை, சுகாதாரத்துறை இணை இயக்குனர் வளர்மதி, மேட்டூர் உதவி சித்த மருத்துவ அலுவலர் ஜெயகுமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X