பொது செய்தி

தமிழ்நாடு

'705 பாடப்பிரிவு தொடங்க தமிழக முதல்வர் நடவடிக்கை'

Added : ஜன 13, 2020
Advertisement

தலைவாசல்: ''நடப்பு கல்வியாண்டில், 705 பாடப்பிரிவுகள் தொடங்க, தமிழக முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.
சேலம் மாவட்டம், தலைவாசல், தேவியாக்குறிச்சியிலுள்ள தனியார் மகளிர் கலை கல்லூரியில், 20வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. அதில், 1,050 மாணவியருக்கு, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பட்டம் வழங்கினார். தொடர்ந்து, அதன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த, 150 மாணவியருக்கு பட்டம் வழங்கினார். பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, கெங்கவல்லி எம்.எல்.ஏ., மருதமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி: நடப்பு கல்வியாண்டில், 705 பாடப்பிரிவுகள் தொடங்க, தமிழக முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். தலைவாசல், கெங்கவல்லியில் அரசு கல்லூரிகள் தொடங்குவது குறித்து, மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். பெரியார் பல்கலை விடுதியில், மாணவி நிவேதிதா தற்கொலை குறித்து, போலீசார் முறையாக விசாரிக்கின்றனர். அவரது இறப்புக்கு காரணம் தெரிந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X