பொது செய்தி

தமிழ்நாடு

டிரைவர், கண்டக்டர்களை தினக்கூலியாக மாற்றி உத்தரவு: அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் கண்டனம்

Added : ஜன 13, 2020
Advertisement

சேலம்: சேம டிரைவர், கண்டக்டர்களை பணி நிரந்தரப்படுத்தாமல், தினக்கூலியாக மாற்றி உத்தரவிட்டதற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2014, 2016ல் நியமித்த, சேம டிரைவர், 6,416 பேர், சேம கண்டக்டர், 6,486 பேரை, உடனடியாக பணி நிரந்தரம் செய்யக்கோரி, 2018 டிச., 6ல், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக பணியாளர் சம்மேளனம், வழக்கு தொடர்ந்தது. சென்னை, தொழிலாளர் துறை தனித்துணை ஆணையர் முன் நடந்த, பல கட்ட விசாரணை முடிவில், நிர்வாக இயக்குனர் எட்டு பேருக்கும், தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியும், பதில் மனுதாக்கல் செய்யவில்லை. இறுதியாக, 2019 டிச., 18ல் வழக்கு நடந்த நிலையில், பதில் மனுதாக்கல் செய்யாததால் வரும், 21க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்துத்துறை கடந்த, 6ல், சேம ஓட்டுனர், 1,828 பேர், நடத்துனர், 537 பேர், பணி மூப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்த, சேம ஓட்டுனர், 1,112 பேர், நடத்துனர், 162 பேரை, தினக்கூலி பணியாளராக மாற்றி உத்தரவிட்டது. இது, தொழிற்சங்கங்கள், டிரைவர், கண்டக்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, வழக்கை தாக்கல் செய்த, சம்மேளன பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது: டிரைவர், கண்டக்டர்களை பணி நிரந்தரப்படுத்த வழக்கு தொடரப்பட்டது. ஆனால், பணி நிரந்தரம் என, அரசாணை வெளியிடாமல், தினக்கூலியாக உத்தரவு பிறப்பித்திருப்பது வேதனையளிக்கிறது. மேலும், சேம ஓட்டுனர், 716 பேர், சேம நடத்துனர், 375 பேருக்கு, தினக்கூலி தகுதி கூட வழங்காதது கண்டனத்துக்குரியது. தொழிலாளர் ஆணையர் முன், 1986, 92, 97, 2016ல், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சில் போடப்பட்ட, 12 (3) ஒப்பந்தங்களில், 240 நாளில் பணி நிரந்தரம் செய்வதாக ஒப்புக்கொண்ட நிர்வாகம், அதை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என, தொழில் தகராறு சட்டம் தெரிவிக்கிறது. அதனால், தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்ட அரசாணையை திரும்ப பெற்று, திருத்தம் செய்து, அரசு வெளியிட வேண்டும். சேம ஓட்டுனர், நடத்துனர், பணியில் நியமித்தது முதல், 240 நாள் பணி முடித்த நாளை கணக்கிட்டு, முன் தேதியிட்டு, பணி நிரந்தரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஓட்டுனர், நடத்துனர் ஏற்கனவே, 1,300 நாளுக்கு மேல் பணிபுரிந்ததால், தாமதிக்காமல் பணி நிரந்தரப்படுத்தி, அரசு உத்தரவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X